ADDED : ஜூலை 14, 2024 04:17 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உள்ளூர், வெளியூர் விற்பனை சந்தைகளில் விளைபொருட்களை தயார்படுத்துதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் வளர்மதி விவசாயிகள் வியாபாரியாக மாறும்போது கடைபிடிக்க வேண்டிய யுக்திகளை குறித்தும், உதவி இயக்குனர் தனலட்சுமி, நடப்பாண்டு வேளாண் மானிய திட்டங்கள், விளைபொருள்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்தும், இயற்கை விவசாயி ராஜேஷ், சீட்ஸ் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்ன முருகன், ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் வெங்கடாசலம், தொழில்நுட்ப மேலாளர் ஜோதி மஞ்சுளா பேசினர். விவசாயிகள் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.