/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம் திருத்தங்கல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
திருத்தங்கல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
திருத்தங்கல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
திருத்தங்கல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
ADDED : ஜூலை 09, 2024 04:36 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என்., அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் சேதம் அடைந்திருப்பதால் சமூக விரோத செயல்கள்நடைபெறுகிறது. மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் சேதம் அடைந்திருப்பதால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என்., அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்கள், பெண்கள், துவக்கப்பள்ளி செயல்படுகின்றது. ஆண்கள் பள்ளி பின்புறம் ஊருணியை ஒட்டி சுற்றுச்சுவர் உள்ளது.
இந்த சுற்றுச் சுவர் பெரும்பான்மையான பகுதி சேதம் அடைந்து கீழே விழுந்து விட்டது. வளாகத்தில் உள்ள கழிப்பறை சேதம் அடைந்திருப்பதால் மாணவர்கள் விபரீதம் அறியாமல் பின்பக்கம் உள்ள ஊருணி பகுதியில் நடமாடுகின்றனர்.
அதே சமயத்தில் வெளி நபர்கள் இடிந்த சுற்றுச் சுவர் வழியாக பள்ளி வளாகத்திற்குள் வந்து மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பள்ளி வேலை நாட்களிலும் இதுபோல் பலர் வருவதால் மாணவர்களுக்கும் இப்பழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வெளி நபர்கள் நடமாட்டத்தால் மாணவிகளும் அச்சத்தில் உள்ளனர். இதனை ஆசிரியர்களும் கண்காணிக்க வழி இல்லை. தவிர பெண்கள் பள்ளி அருகே ஆலவூரணி வழியாக செல்லும் சுற்றுச்சுவர் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் மாணவிகள் நடமாடும் போதோ, ரோட்டில் மக்கள்நடமாடும் போதோ சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சேதம் அடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.