/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள் சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்
சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்
சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்
சேதமான ரோடு, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் தவிப்பில் விருதுநகர் மன்னார்க்கோட்டை ஊராட்சி மக்கள்

பராமரிப்பு தேவை
காசி கனி, மேலக்கோட்டையூர்: மாரியம்மன் கோயிலுக்கு ஊராட்சியில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும். கண்மாய் கரையில் வளர்ந்துள்ள கருவேல முள் மரங்களை அகற்ற வேண்டும். எங்கள் மயானத்திற்கு பாதை பராமரிப்பு இன்றி உள்ளதால் மக்கள் நடந்து செல்லும் போது சிரமத்தை சந்திக்கின்றனர்.
மின் பிரச்னையால் அல்லல்
கே.சாமியப்பன், தலைவர்,சிறகுகள் அமைப்பு: மேலக்கோட்டையூருக்கு தெற்கு தெருவில் மயானத்திற்கு பாதை, தண்ணீர் வசதி இல்லை. தன்னார்வ அமைப்பு சார்பில் சுகாதார வளாகம் கட்டியும் மின், குடிநீர் வசதி இல்லை. எங்கள் ஊரில் மின் பிரச்னை உள்ளது. அடிக்கடி இரண்டு லைனில் ஒரு லைன் போய்விடும். லேசான மழை பெய்தாலே மின்தடை ஏற்பட்டு விடும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கூழ்வளந்தான், ஊராட்சி தலைவர், விருதுநகர்: முத்துசிவலிங்காபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி, வாறுகால், சின்னையாபுரத்தில் சுகாதார வளாகம், 3 தெருக்களில் பேவர் பிளாக் ரோடு, அடிகுழாய், மன்னார்க்கோட்டையில் ரோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது.