/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாறுகாலில் பாய்ந்த டவுன் பஸ் *அலறி அடித்து ஓடிய பயணிகள் வாறுகாலில் பாய்ந்த டவுன் பஸ் *அலறி அடித்து ஓடிய பயணிகள்
வாறுகாலில் பாய்ந்த டவுன் பஸ் *அலறி அடித்து ஓடிய பயணிகள்
வாறுகாலில் பாய்ந்த டவுன் பஸ் *அலறி அடித்து ஓடிய பயணிகள்
வாறுகாலில் பாய்ந்த டவுன் பஸ் *அலறி அடித்து ஓடிய பயணிகள்
ADDED : ஜூன் 13, 2024 05:16 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் தற்காலிக டிரைவரால் வாறுகாலில் பாய்ந்தது அரசு டவுன் பஸ். பயணிகள் அலறி அடித்து இறங்கினர்.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி வழியாக காரியாபட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டினார். நேற்று மாலை 4:00 மணிக்கு மல்லாங்கிணரில் வாறுகாலில் பாய்ந்தது. பள்ளி,வேலை முடித்து வருபவர்கள் என அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. பஸ் கவிழ்ந்து விடுமோ என்கிற அச்சத்தில் பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பஸ் லேசாக சாய்ந்து நின்றதால் பெரும் அசம்பாவிதம் இன்றி பயணிகள் கடைக்காரர்கள் தப்பினர். ஆக்கிரமிப்பு அகற்றி ஒருவழிப்பாதையாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
படம் உண்டு.