Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க ஊருணியில் கிராவல் மண் கொள்ளை கண்டுகொள்ளாத வருவாய்துறை

பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க ஊருணியில் கிராவல் மண் கொள்ளை கண்டுகொள்ளாத வருவாய்துறை

பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க ஊருணியில் கிராவல் மண் கொள்ளை கண்டுகொள்ளாத வருவாய்துறை

பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க ஊருணியில் கிராவல் மண் கொள்ளை கண்டுகொள்ளாத வருவாய்துறை

ADDED : ஜூலை 07, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி பார்த்தசாரதி ஊருணியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டு தனியார் பிளாட்டுகள் அமைக்க கொண்டு சென்றுள்ளனர். இதை வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கட்டங்குடி ஊராட்சி . இவ்வூராட்சியில் பார்த்தசாரதி ஊருணி உள்ளது. ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்ட ஊருணி நாளடைவில் பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் கட்டங்குடி - கோவிலாங்குளம் ரோட்டில் விவசாய நிலத்தில் பிளாட்டுகள் அமைத்துள்ளனர். இந்தப் பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க எவ்வித அனுமதியுமின்றி பார்த்தசாரதி ஊருணியில் கிராவல் மண்ணை அள்ளி பாதைக்கு பயன்படுத்தி உள்ளனர். அருகில் உள்ள பட்டா நிலத்திலும் கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. ஊருணியில் 10 ஆழத்திற்கு மேல் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கட்டங்குடி விவசாயி சுந்தரமூர்த்தி : முன்பு பார்த்தசாரதி ஊருணி விவசாயம் செய்ய பயன்பட்டது. தற்போது பராமரிப்பு இன்றி இருக்கிறது. ஊருணியில் அரசு அனுமதி இல்லாமல் கிராவல் மண்ணை பிளாட்டுகளுக்கு பாதை அமைக்க செல்கின்றனர். இதனால் ஊருணியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

செந்திவேல், தாசில்தார் : அரசு நிலமாக இருந்தாலும் தனியார் நிலமாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்று தான் கிராவல் மண் அள்ள வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும்.

வள்ளி கண்ணு, ஆர்.டி.ஓ.: பார்த்தசாரதி ஊருணியில் அனுமதி இன்றி மண் அள்ளியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தாசில்தார் ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பித்த பின்,மண் அள்ளியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.- - -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us