/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி.,நண்பர்கள் ரோட்டரி சங்கத்திற்கு விருது ஸ்ரீவி.,நண்பர்கள் ரோட்டரி சங்கத்திற்கு விருது
ஸ்ரீவி.,நண்பர்கள் ரோட்டரி சங்கத்திற்கு விருது
ஸ்ரீவி.,நண்பர்கள் ரோட்டரி சங்கத்திற்கு விருது
ஸ்ரீவி.,நண்பர்கள் ரோட்டரி சங்கத்திற்கு விருது
ADDED : ஜூலை 07, 2024 01:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ரோட்டரி மாவட்ட அளவில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் நண்பர்கள் ரோட்டரி சங்கம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
7 வருவாய் மாவட்டங்களை கொண்ட ஒரு ரோட்டரி மாவட்டத்தில் அரசு தேர்வுக்கு பயிற்சி வகுப்பு, ஏழைகளுக்கு உணவு வழங்குதல், 300 பேருக்கு கல்வி உதவித்தொகை, ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு மருத்துவ உதவி, புதிய சங்கங்கள் அமைத்தல், சமூகப் பணி போன்ற சாதனைகள் படைத்ததற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது தலைவர் முருகதாசனுக்கு ரோட்டரி விழாவில் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் 6 பரிசுகளும், வட்டார அளவில் 2 பரிசுகளும் பெற்றது.
துணை ஆளுநர் வேலாயுதம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பால்சாமி, ராஜாமணி, அங்குராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.