/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள் சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள்
சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள்
சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள்
சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள்
ADDED : ஜூன் 02, 2024 03:22 AM

காரியாபட்டி: துார்வாராத பிள்ளையார்கோயில் ஊருணி, பயன்பாடில்லாத மகளிர் சுகாதார வளாகம் ,ஜல்லிக் கற்களாக இருக்கும் மயான ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமத்தில் காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள் உள்ளனர்.
இங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகின. இடிந்து விழும் நிலையில் பயன்பாடு இன்றி உள்ளது. பெண்கள் திறந்தவெளியை நாடுவதால் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சமுதாயக்கூடம் கிடையாது.
தோட்டத்து பகுதியில் களம் இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மயான ரோடு சேதமடைந்து ஜல்லிக் கற்களாக ஆட்கள் கூட நடக்க முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ளது.
தாழ்வாக இருக்கும் நிழற்குடையில் பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேல்நிலைத் தொட்டி பில்லர் சேதம் அடைந்துள்ளது.
பிள்ளையார் கோயில் ஊருணி தூர் வாராமல் உள்ளது. கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மழை நீரை தேக்க முடியவில்லை.
ரேஷன் கடை இல்லாததால் 4 கி. மீ., தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டி உள்ளதால் பெரியவர்கள் சிரமப்படுகின்றனர்.
குடிநீர் உப்பு தண்ணீராக இருப்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காலனியில் மேல்நிலைத் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.