ADDED : ஜூன் 20, 2024 04:09 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் தாமரைப்பாண்டி, 21, பி.பி.ஏ.படித்துள்ளார். அரசு தேர்வுக்கு தயராகி வந்தார்.
தான் காதலிக்கும் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாய் பாண்டியம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதற்கு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக தாய் கூறியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த தாமரைப்பாண்டி நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.