ADDED : ஜூன் 20, 2024 04:08 AM
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
பிரம்மோற்சவ விழா ஜூன் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், 10 ம் நாள் விழாவாக நேற்று இரவு 7:30 மணிக்கு, மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பெண்களுக்கு திருமாங்கல்யம்,வளையல் மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.