/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலை உணவு திட்டத்தால் புலம்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு காலை உணவு திட்டத்தால் புலம்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
காலை உணவு திட்டத்தால் புலம்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
காலை உணவு திட்டத்தால் புலம்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
காலை உணவு திட்டத்தால் புலம்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 12, 2024 04:06 AM
ராஜபாளையம்: காலை உணவு திட்டம் என்ற பெயரில் தினமும் பள்ளி ஆசிரியர்களை துன்புறுத்துவதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட செயலாளர் செல்வகணேசன் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் 2ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 15 முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதற்காக சமையலறையை வர்ணம் பூசவும், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர், காலை உணவு திட்டம் என்று எழுதிய பேனர், தண்ணீர், மின் வசதி போன்றவை உடனடியாக பள்ளிகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சரியாக இல்லாவிடில் ஆசிரியர்களது ஊதியம் நிறுத்தப்படும் என கல்வி அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளில் இரண்டு ஆசிரியர் மட்டும் பணிபுரிந்து வருகிற நிலையில், பள்ளிகளுக்கான நான்கு வகை சான்றுகள், பதிவேடுகள், கழிப்பறை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள், வர்ணம் பூசுதல், பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கு பள்ளி நிர்வாகம் எவ்வித உதவியும் செய்யாததால், ஆசிரியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து சிறு தொகையை செலவு செய்து வருகின்றனர்.
காலை உணவு திட்டத்திற்கான ஆயத்த பணிகளை செய்ய அரசு எவ்வித நிதியும் ஒதுக்காமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களிடம் திட்டத்திற்கான பணிகளை செய்யக்கோரி கடந்த இரண்டு வாரங்களாக மிரட்டுகின்றனர்.
இதனால் காலை உணவு திட்டம் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்வேறு பணிகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் தற்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். எனவே அரசு பள்ளிகளை போல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனைத்து பொருட்களையும் அரசு இலவசமாக தர வேண்டும், என்றார்.