ADDED : ஜூன் 12, 2024 06:07 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சி தலைவர் திரவியம் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்ககு நோட்டு, பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ், டிபன் பாக்ஸ் உட்பட உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகள் யுவஸ்ரீக்கு 5 ஆயிரம், பிரியதர்ஷினிக்கு 3 ஆயிரம் ரொக்க பணம் வழங்கினார்.