ADDED : ஜூன் 12, 2024 06:07 AM
அரசு பஸ் மோதி பெண் காயம்
சிவகாசி: சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் 64. இவர் தனது மனைவி ஈஸ்வரி 50, பேரனுடன் தனது டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது சித்துராஜபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியதில் ஈஸ்வரி காலின் மீது பஸ் சக்கரம் ஏறியதில் இடது கால் பாதம் நசுங்கியது. மேலும் டூவீலர் சேதம் அடைந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றெரு விபத்து: வெம்பக்கோட்டை அருகே கெட்ட மடக்கிபட்டியை சேர்ந்தவர் அன்னம்மாள் 65. இவர் சாட்சியாபுரம் அருகே ரோட்டில் நடந்து வரும் போது நியூ ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ---
கஞ்சா: 3 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் பள்ளி அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அய்யம்பட்டியை சேர்ந்த வாசு, 37, சத்யா, 39, அனுஷியா, 32, ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்கொலை
விருதுநகர்: சென்நெல்குடியைச் சேர்ந்தவர் லட்சுமி 37. இவரின் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன வருத்தத்தில் இருந்தவர் ஜூன் 10 காலை 10:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.