/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலெக்டர் பரிந்துரைத்தும் பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் அவதி கலெக்டர் பரிந்துரைத்தும் பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் அவதி
கலெக்டர் பரிந்துரைத்தும் பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் அவதி
கலெக்டர் பரிந்துரைத்தும் பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் அவதி
கலெக்டர் பரிந்துரைத்தும் பணம் கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் அவதி
ADDED : மார் 14, 2025 06:30 AM
ராஜபாளையம்:? சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்தது தொடர்பாக நிலுவைத் தொகையை வழங்க கலெக்டர் பரிந்துரைத்தும் எந்தவித நடவடிக்கை இல்லாததால் கரும்பு விவசாயிகள் தவிக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நீர் வரத்தை அடிப்படையாக கொண்டு ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3500 ஹெக்டேர் கரும்பு விவசாயம் இருந்து வந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தனியார் சர்க்கரை ஆலை தொடங்கியதன் பலனாக இந்நிலை அதிகரித்தது.
2018 ல் சர்க்கரை ஆலை அரவையை நிறுத்தியதால் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.24 கோடி பட்டுவாடா இல்லாததால் விவசாயிகள் செய்வது அறியாமல் தவித்தனர்
இதையடுத்து கரும்பு விவசாயிகள் சிவகங்கை தேனியில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு பதிவு செய்து தங்கள் கரும்பை அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கிய பின்பு மீண்டும் ஆலையை இயக்கலாம் என்று தனியார் சர்க்கரை ஆலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி கடந்த ஆண்டு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை ஜூன் மாதம் ஆலை நிர்வாகம் வழங்கியது.
மீதமுள்ள கரும்பு விவசாயிகளின் பட்டுவாடா பணத்தை அதே ஆண்டு நவ.30க்குள் செலுத்திய பின் ஆலைகளை நடத்துவதாக தகவல் தெரிவித்தும் அதன்பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் தற்போது வரையிலான விவசாயிகளின் விவரம் செலுத்த வேண்டிய தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்தி தகவல் அனுப்பப்பட்டது.
இதன்பின் மாவட்ட கலெக்டர் கரும்பு நிர்வாக மேல் முறையீடு நிர்வாக தீர்ப்பாணையத்திற்கு நிலுவைத் தொகை குறித்து கடிதம் எழுதி 3 மாதம் கடந்தும் தற்போது வரை நிலுவைத் தொகை கிடைக்கவில்லை.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா: பல ஆண்டுகளுக்குப் பின் விவசாயிகளின் நிலுவைத் தொகுதியில் பாதியை தந்துவிட்டு ஆலையை திறக்க பேச்சுவார்த்தை நடந்தது. முழுமையாக தொகையை வழங்கி பின்பு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர்கள் தரப்பில் இருந்தது. தற்போது நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்ற கலெக்டரின் பரிந்துரை கடிதத்திற்கு பின்னும் எந்த நகர்வும் இல்லாததால் வங்கி தனியார் கடன்களை அடைக்க முடியாமல் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். தீர்வு காண வேண்டும்.