/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இடிந்த அச்சங்குளம்-இரவார்பட்டி ஆற்று பாலம் 20 ஆண்டாக கட்டதால் 10 கி.,மீ அலையும் மக்கள் இடிந்த அச்சங்குளம்-இரவார்பட்டி ஆற்று பாலம் 20 ஆண்டாக கட்டதால் 10 கி.,மீ அலையும் மக்கள்
இடிந்த அச்சங்குளம்-இரவார்பட்டி ஆற்று பாலம் 20 ஆண்டாக கட்டதால் 10 கி.,மீ அலையும் மக்கள்
இடிந்த அச்சங்குளம்-இரவார்பட்டி ஆற்று பாலம் 20 ஆண்டாக கட்டதால் 10 கி.,மீ அலையும் மக்கள்
இடிந்த அச்சங்குளம்-இரவார்பட்டி ஆற்று பாலம் 20 ஆண்டாக கட்டதால் 10 கி.,மீ அலையும் மக்கள்
ADDED : மார் 14, 2025 06:31 AM

சாத்துார்: சாத்துார் அருகே வெள்ளத்தில் இடிந்து 20 ஆண்டாகியும் இதுவரை கட்டாத அச்சங்குளத்தில்- இரவார் பட்டி வைப்பாறு ஆற்றுப்பாலத்தை கட்டாததால் சிவகாசி, சாத்துார் செல்ல 10 கி.மீ., சுற்று செல்லும் அவல நீடித்து வருகிறது. .
வெம்பக்கோட்டைஊராட்சி ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட அச்சங்குளத்தில் இருந்து இரவார் பட்டிக்கு செல்லும் வைப்பாறு ஆற்றுப்பாலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது.
இதன் காரணமாக அச்சங்குளத்தில் வசிக்கும் மக்கள் சிவகாசி, சாத்துார் செல்ல 10 கிலோமீட்டர் துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் அச்சங்குளம் கிராமத்தினர் மற்றும் இரவார் பட்டி கிராமத்தினர் ஆற்றுக்குள் பாதை அமைத்து சென்று வருகின்றனர்.
மழைக்காலத்தில் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இடிந்து போன ஆற்றுப் பாலத்தை புதியதாக கட்டித் தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.