/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலியான மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடத்தால் தவிப்பு; நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவதால் பயனாளிகள் காலியான மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடத்தால் தவிப்பு; நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவதால் பயனாளிகள்
காலியான மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடத்தால் தவிப்பு; நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவதால் பயனாளிகள்
காலியான மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடத்தால் தவிப்பு; நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவதால் பயனாளிகள்
காலியான மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடத்தால் தவிப்பு; நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவதால் பயனாளிகள்
ADDED : ஜூலை 10, 2024 07:01 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஓராண்டாக மாற்றுத்திறனாளி அலுவலர் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமதமாவடதால் பயனாளிகள் தவிப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளனர். இவர்களை தவிர அடையாள அட்டை வாங்காமல் இன்னும் ஏராளமானோர் இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெறவும், உபகரணங்கள், உதவி திட்டங்கள் பெறவும் அடையாள அட்டை அவசியமாகிறது. இந்த அடையாள அட்டை பெற புதன் கிழமை தோறும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஒப்புதலோடு வழங்கப்படுகிறது. ஓராண்டாக மாற்றுத்திறனாளி அலுவலர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் உள்ளதால் உடனுக்குடன் அடையாள அட்டை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தாமதமாவதோடு அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். குறிப்பாக அவர்களை உடன் அழைத்து வரும் பெற்றோர், காப்பாளர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதே போல் உபகரணங்கள் பெறுவது தொடர்பான அனுமதி பெறுவதும், நலத்திட்டங்களில் பயன்பெற அலுவலரை சந்திப்பதும் கானல் நீராக உள்ளது. ஓராண்டாக கூடுதல் பொறுப்பே நீடிப்பதால் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அரசிடம் பரிந்துரைத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட தலைவர் நடராஜன் கூறியதாவது: தற்போதைய அலுவலர் தேனி மாவட்டத்தில் இருந்து கூடுதல் பொறுப்பு பார்க்கிறார். அட்டை கொடுப்பதில் தாமதம் உள்ளது. புதன் கிழமை மதிப்பீட்டு முகாமிற்கு மாற்றுத்திறனாளி அலுவலர் வராததால் அடுத்த செவ்வாய் கிழமை வரை காத்திருந்து மீண்டும் அலுவலரை சந்தித்து வாங்க வேண்டி உள்ளது. தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கிறது. புதிதாக உபகரணங்கள் வாங்கவும் சிரமம் ஏற்படுகிறது. அலைபேசி எண் கூட இன்னும் சரிவர பயன்பாட்டில் இல்லை. எங்களால் உதவி கோரி தொடர்பு கொள்ள முடியவில்லை. கூடுதல் பொறுப்பு பார்க்கும் அதிகாரி எப்போது வருகிறார் என்பதும் எங்களுக்கு தெரியவில்லை, என்றார்.