/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் - -அத்திக்குளம் குறுகலான ரயில்வே கேட் ரோடு ஸ்ரீவில்லிபுத்துார் - -அத்திக்குளம் குறுகலான ரயில்வே கேட் ரோடு
ஸ்ரீவில்லிபுத்துார் - -அத்திக்குளம் குறுகலான ரயில்வே கேட் ரோடு
ஸ்ரீவில்லிபுத்துார் - -அத்திக்குளம் குறுகலான ரயில்வே கேட் ரோடு
ஸ்ரீவில்லிபுத்துார் - -அத்திக்குளம் குறுகலான ரயில்வே கேட் ரோடு
ADDED : ஜூலை 19, 2024 06:25 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து அத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு அகலமில்லாமல் குறுகலாக இருப்பதால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அத்திக்குளம், நாச்சியார் பட்டி, அச்சம் தவிர்த்தான், ராமலிங்காபுரம், ரெட்டியபட்டி உட்பட ஏராளமான கிராம மக்கள் அத்திக்குளம் ரயில்வே கேட் வழியாக நகர் பகுதிக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர். இதனால் இந்த ரோட்டில் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிகளவில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரெட்டியபட்டி வரை உள்ள இந்த மாநில நெடுஞ்சாலை, போதிய அகலம் இல்லாமல் குறுகலாக இருப்பதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வந்தால் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
மேலும், அத்திக்குளம் ரயில்வே கேட் இருபுறமும் பள்ளமாக இருப்பதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து அத்திகுளம், நாச்சியார் பட்டி வழியாக செல்லும் ரோட்டினை இருவழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.