/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்

டிரைவர்களுக்குள் மோதல்
ஞானசேகர் ராஜா. சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. தனியார், அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. செவ்வாய் சனி ஞாயிறுக்கிழமைகளில் பஸ்கள் வந்தவுடன் வெளியேறும் நிலை உள்ளது.
குளமாக மாறும் பஸ் ஸ்டாண்ட்
பாபு, சாத்துார்: பஸ் ஸ்டாண்ட் மிகவும் பள்ளத்தில் உள்ளது. ரோடு பல அடி உயரம் உயர்ந்து விட்டதாலும். மரியன் ஊரணியில் இருந்து வரும் மழை நீர் முழுவதும் பஸ் ஸ்டாண்டிற்குள் புகுந்து பஸ் ஸ்டாண்ட் நீச்சல் குளமாக மாறிவிடுகிறது. முட்டளவு தண்ணீர் நிற்கும் நிலை உள்ளது. சிவகாசி விருதுநகரில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
தீர்வு
சாத்துார் அண்ணா நகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு விரைந்து பஸ் ஸ்டாண்ட் கட்ட தேவையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பழைய பஸ் ஸ்டாண்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.