/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருவிழா தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது திருவிழா தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது
திருவிழா தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது
திருவிழா தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது
திருவிழா தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 05:38 AM
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 35. இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. கருப்பசாமி மண் அள்ளும் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் முத்துமாரியம்மன் காலனி கோயில் அருகே கருப்பசாமியை மர்ம நபர் வெட்டி கொலை செய்து தப்பினர்.
கிழக்கு போலீசார் இது தொடர்பாக முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த ராமர், வீரபாலன், பால்பாண்டி, ஆனந்த், ஜீவா, விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பத்து நாட்களுக்கு முன்பு கருப்பசாமி மற்றொரு சமுதாயத்திரை பற்றி தவறாக பேசி அலைபேசியில் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டிருந்தது. மேலும் முத்துமாரியம்மன் காலனியில் ஜூன் 5 இரவு ஒரு சமூகத்தினர் சார்பில் கோயில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம் நடந்த போது, டூ வீலரில் வந்த கருப்பசாமிக்கும் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த கருப்பசாமியை, பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதானம் பேச ரமார் அழைத்து சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ராமர், வீரபாலன், பால்பாண்டி, ஆனந்த், ஜீவா, விக்னேஷ் ஆகிய 6 பேரும் கருப்பசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர், என்றனர்.