/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது
தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது
தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது
தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது
ADDED : ஜூன் 06, 2024 08:50 PM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தாயை கேலி செய்தவரை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் கிழவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. கணவரை இழந்த நிலையில், அய்யப்பன் 20, கார்த்திகேயன், 10, என, இரண்டு மகன்களுடன் கூலித்தொழில் செய்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகே நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட சதீஷ், 48, என்பவர் வாடகை வீட்டில் வசித்தார். இவர், மகாலட்சுமியை நண்பர்களுடன் சேர்ந்து, கேலி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு அய்யப்பன், மது போதையில் இருந்த சதீஷிடம் தட்டிக் கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியதில் அருகே இருந்த கட்டையால் சதீஷை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அய்யப்பனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.