ADDED : ஜூன் 06, 2024 11:14 PM
சிவகாசி:சிவகாசி அருகே திருத்தங்கலில் மண் அள்ளும் இயந்திர டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 33. இவரது மனைவி பாண்டிச்செல்வி, 29. இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கருப்பசாமி, மண் அள்ளும் இயந்திர டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நேற்றிரவு 8:30 மணிக்கு முத்துமாரியம்மன் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே கருப்பசாமியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., சுப்பையா ஆய்வு செய்தார். கொலைக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.