/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி அடுத்த மாதம் துவக்கம் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி அடுத்த மாதம் துவக்கம்
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி அடுத்த மாதம் துவக்கம்
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி அடுத்த மாதம் துவக்கம்
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி அடுத்த மாதம் துவக்கம்
ADDED : ஜூன் 13, 2024 05:24 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், அடுத்த மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
2021ல் சிவகாசி - விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங்(424), சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்(427) ஆகியவற்றில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது.
சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்ததை அடுத்து, ரூ.28 கோடி மதிப்பில் 23 பேரிடம் இருந்து 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.64 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு, மண் மாதிரி சேகரிக்கப்பட்டது.
ஜன. 26ல் சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய இரு நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டது.
தொடர்ந்து இரு மாதங்களுக்கு முன் இறுதிகட்ட நில அளவீடு பணிகள் நடைபெற்றது. மேம்பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்த நிலையில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் நேற்று எம்.எல்.ஏ., அசோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (சிறப்பு திட்டம்) ஜெகன் செல்வராஜ், உதவி பொறியாளர் ஆர்த்தி ஆகியோர் மாற்றுப்பாதை குறித்து சாட்சியாபுரத்தில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜிடம் கூறியதாவது, 'சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு விட்டது.
பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கினால், மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அடுத்த மாதத்தின் கட்டுமானப் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது, என்றார்.