/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குழாய் உடைந்து குடிநீர் வீண் பற்றாக்குறையால் மக்கள் அவதி குழாய் உடைந்து குடிநீர் வீண் பற்றாக்குறையால் மக்கள் அவதி
குழாய் உடைந்து குடிநீர் வீண் பற்றாக்குறையால் மக்கள் அவதி
குழாய் உடைந்து குடிநீர் வீண் பற்றாக்குறையால் மக்கள் அவதி
குழாய் உடைந்து குடிநீர் வீண் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 13, 2024 05:23 AM

சிவகாசி: சிவகாசி அருகே சிங்கம்பட்டியில் உள்ள மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புப் பட்டியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகாசி அருகே சிங்கம்பட்டியில் உள்ள தொட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இங்கிருந்து மாரனேரி, விளாம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி, ஊராம் பட்டி, கிச்ச நாயக்கன் பட்டி, சித்துராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இந்நிலையில் சிங்கம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே இங்குள்ள தொட்டிக்கு வரும் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஓடுகின்றது.
இதனால் தொட்டிக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை. விளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே உடைந்த குழாயினை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.