/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு மரக்கன்றுகள்
பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு மரக்கன்றுகள்
பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு மரக்கன்றுகள்
பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு மரக்கன்றுகள்
ADDED : ஜூன் 11, 2024 07:26 AM

காரியாபட்டி : காரியாபட்டி தாமரைக்குளம் பகுதியில் ரூ. பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குறுங்காடு, போதிய பராமரிப்பின்றி, மரக்கன்றுகள் கருகி வருகின்றன.
காரியாபட்டி தாமரைக்குளம், கம்பாளி, துலுக்கன்குளம், இசலிமடை உள்ளிட்ட பகுதிகள் வறட்சியானவை. அதிக அளவில் சீமைக் கருவேல மரங்கள் முளைத்து, விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால், காடுகள் தரிசுகளாக உள்ளன. இப்பகுதியை வளம் மிக்கதாக மாற்ற ரூ.பல லட்சம் செலவில் அரசு புறம்போக்கு நிலங்களில் குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்பகுதியில் ஏராளமான குறுங்காடுகள் அமைக்கப்பட்டதில் தாமரைக்குளத்தில் அமைக்கப்பட்ட குறுங்காடு போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்று, சவுக்கு, வேம்பு, தேக்கு, பழ வகை மரக்கன்றுகள் கருகி வருகின்றன. வறட்சியான பகுதியை வளம் மிக்கதாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை கேள்விக்குறியானதால், அரசு நிதி வீணாகி வருகிறது.
மறுபடியும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. இதனை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.