/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஓடையில் தேங்கிய கழிவு நீர் கோரை புற்கள் ஆக்கிரமிப்பு ஓடையில் தேங்கிய கழிவு நீர் கோரை புற்கள் ஆக்கிரமிப்பு
ஓடையில் தேங்கிய கழிவு நீர் கோரை புற்கள் ஆக்கிரமிப்பு
ஓடையில் தேங்கிய கழிவு நீர் கோரை புற்கள் ஆக்கிரமிப்பு
ஓடையில் தேங்கிய கழிவு நீர் கோரை புற்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:56 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியிலிருந்து திருவேங்கடம் செல்லும் ரோட்டில் ஓடையில் கழிவுநீர் கோரைப்புற்கள் ஆக்கிரமித்து உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் நான்கு விலக்கு ரோட்டில் இருந்து திருவேங்கடம் செல்லும் ரோட்டில் ஓரத்தில் சிறிய ஓடை உள்ளது. இது கழிவு நீர் ,கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த ஓடை அருகே அங்கன்வாடி மையம், துணை சுகாதார மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இயங்கி வருகின்றது.
இந்நிலையில் ஓடையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகின்றது. இதில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள அங்கன்வாடி மையம் குழந்தைகளை கடிப்பதால் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் துணை சுகாதார மையத்திற்கு வருபவர்களும் அவதிப்படுகின்றனர்.
மழைக்காலங்களில் கழிவுநீர் ஓடையை விட்டு வெளியேறி துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம் வளாகம் முழுவதுமே தேங்கி விடுகின்றது, தவிர இதனை கடந்து செல்கின்ற வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை துார்வாரி கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.