/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நான்கு வழிச்சாலை பாலங்களில் இரும்பு ராடுகளால் விபத்து அபாயம் நான்கு வழிச்சாலை பாலங்களில் இரும்பு ராடுகளால் விபத்து அபாயம்
நான்கு வழிச்சாலை பாலங்களில் இரும்பு ராடுகளால் விபத்து அபாயம்
நான்கு வழிச்சாலை பாலங்களில் இரும்பு ராடுகளால் விபத்து அபாயம்
நான்கு வழிச்சாலை பாலங்களில் இரும்பு ராடுகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 09, 2024 02:55 AM

காரியாபட்டி, : மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச் சாலையில் குண்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் இரும்பு ராடு சேதமடைந்து பெயர்ந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. விபத்திற்கு முன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - துாத்துக்குடி 4 வழிச் சாலை 14 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், ஓடைகள், நீர்வரத்து பகுதிகள் என பெரிய சிறிய அளவிலான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பெரிய பாலத்தின் ஒவ்வொரு கான்கிரீட் இணைப்புக்கும் நடுவில் இரும்பு ராடு பொருத்தப்பட்டுள்ளது. காரியாபட்டி தோனுகால் குண்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இரும்பு ராடு சரிவர பொருத்தாததால் பெயர்ந்து உள்ளன.
வாகனங்கள் செல்லும்போது அதிக சத்தம் எழுப்புகின்றன. பயணிகள், டிரைவர்கள் அச்சமடைகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும்போது ராடு ஒரு பக்கம் மேலே எழும்புகிறது. வாகனத்தின் அடிப்பாகத்தில் அல்லது டயரில் பட்டு விபத்து அபாயம் உள்ளது. பாலங்கள் அடிக்கடி சேதமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது.
இப்பாலத்தின் அருகே 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் இன்னும் கம்பீரமாக உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இடிக்க முடியாத அளவிற்கு வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வருவதோடு பாலத்தின் பக்கவாட்டு சுவர்களும் சேதம் அடைந்து வருகின்றன.
டோல்கேட்டில் பணம் வசூல் செய்வதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், ரோட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றனர். விபத்திற்கு முன் பாலத்தில் பெயர்ந்துள்ள இரும்பு ராடை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.