கருத்தரங்கு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை பிரிவு, மாவட்ட சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது. மாணவர் சேவை பிரிவு டீன் நிர்மல்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சாரதி தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ.,க்கள் வகுலாதேவி, புகழேந்தி, தங்கப்பாண்டி பேசினர். புள்ளியியல் துறை உதவியாளர் விஜயலட்சுமி போதை பொருளால் உடல் நலம் பாதிப்பு பற்றி பேசினார். ஆராய்ச்சி டீன் ஜெயகுமரன் பேசினார். மாணவர்கள் போதைக்கு எதிரானஉறுதிமொழி எடுத்து கொண்டனர். பேராசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் புதிய மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 5 நாள்கள் நடந்தது. கல்லுாரி பேரவை தலைவர் அமுதா வரவேற்றார். பல அமைப்புகளின் பொறுப்பாசிரியர்கள் அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினர். யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரி மாணவி வைசாலி பேசினார்.