ADDED : ஜூன் 07, 2024 04:38 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரை திரு.வி.க.நகரில் கோதையாண்டாள் 72, ஏப் 26 காலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்ற போது கழுத்தில் அணிந்திருந்த 5 1/4 பவுன் செயினை டூவீலரில் வந்து இருவர் பறித்து சென்றனர்.
இந்த வழக்கில் கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஷான் 24, ரம்ஜாத் 23, இருவரையும் கைது செய்து திருடு போன செயினை பறிமுதல் செய்த தனிப்படை எஸ்.ஐ., அங்காள ஈஸ்வரன், ஏட்டுக்கள் சரவணக்குமார், பிரபு, முரளிதரன், முத்து ஈஸ்வரன் ஆகியோரை எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா நேரில் அழைத்துபாராட்டினார்.