/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜை சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜை
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜை
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜை
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜை
ADDED : ஜூலை 27, 2024 06:20 AM
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பால கட்டுமான பணிக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ரயில்வே பாலம் அமைக்க ரூ.23.25 கோடி அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவிட்டார். சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் ணிகளை மேற்கொண்டு விரைவில் மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசுகையில், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை மக்களுக்கு சிரமம் இல்லாமல் விரைவில் பணிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் வரவேற்கும் வகையில் திருத்தங்கல் , சாத்துாரிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
சிவகாசி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறில் சுற்றுச்சாலை வரவுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.