ADDED : ஜூன் 05, 2024 12:15 AM
சாத்துார், : சாத்துார் அருகே பனையடிபட்டியில் நேற்று மாலை 4:00 மணிக்கு காட்டில் இருந்து தப்பி வந்த 4 வயது புள்ளி மான் தெரு நாய்களிடம் சிக்கியது.
நாய்கள் விரட்டியதால் மான் அங்கும் இங்கும் ஓடியது.
மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டனர். சிவகாசி வனத்துறைக்கு தகவல் ெகாடுத்தனர். ஆனால் பொதுமக்கள் மீட்டமான் சிறிது நேரத்தில் இறந்தது.
வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனை செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர்.