/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு பலி: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசை வலியுறுத்துவோம் ம.தி.மு.க., எம்.பி., துரை பட்டாசு பலி: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசை வலியுறுத்துவோம் ம.தி.மு.க., எம்.பி., துரை
பட்டாசு பலி: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசை வலியுறுத்துவோம் ம.தி.மு.க., எம்.பி., துரை
பட்டாசு பலி: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசை வலியுறுத்துவோம் ம.தி.மு.க., எம்.பி., துரை
பட்டாசு பலி: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசை வலியுறுத்துவோம் ம.தி.மு.க., எம்.பி., துரை
ADDED : ஜூலை 07, 2024 11:48 PM
சாத்துார்; பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம் என ம.தி.மு.க., எம்.பி., துரை கூறினார்.
சாத்துார் அருகே பந்துவார் பட்டி குரு ஸ்டார் பட்டாசு ஆலையில் ஜூன் 29ல் வெடிவிபத்து நடந்தது. இதில் நடுச்சூரங்குடி மாரிசாமி, அச்சங்குளம் ராஜ்குமார், சத்திரப்பட்டி மோகன், செல்வகுமார் ஆகியோர் பலியாகினர்.
வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தை நேற்று ம.தி.மு.க., எம்.பி.,யும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றி பட்டாசு தயாரித்தால் விபத்துக்கள் ஏற்படாது. விதி மீறல் காரணமாக தான் பட்டாசு விபத்து ஏற்படுகிறது.
பட்டாசு ஆலை சார்பில் ரூ.5 லட்சம் காசோலை, தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. மத்திய அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை என பலியான தொழிலாளர் குடும்பத்தினர் தெரிவித்தனர். மத்திய அரசு விரைந்து நிவாரணத் தொகை வழங்க லோக்சபாவில் வலியுறுத்துவேன். தமிழக அரசு பட்டாசு விபத்தில் பலியாகும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க ம.தி.மு.க., எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்துவார், என்றார்.