/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு
உரிமம் ரத்து ஆலையில் பட்டாசு தயாரிப்பு
ADDED : ஜூலை 07, 2024 11:47 PM
சிவகாசி : சிவகாசி சுப்பிரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் நீராத்தி லிங்கம். இவருக்கு போடுரெட்டியாபட்டியில் ஸ்ரீரங்கா பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை விதி மீறி இயங்கியதாக 2023 நவ. 10 ல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்த நிலையில் இந்த பட்டாசு வாலையில் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் அதிகப்படியான தொழிலாளர்களை வைத்து தயாரிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட சரவெடிகளும் தயாரிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மாரனேரி போலீசார் ஆலை உரிமையாளர் நீராத்தி லிங்கம், போர் மேன் இருளப்பன், மேலாளர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர்.