விருதுநகர்: விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் நேற்று அதை மீண்டும் மர்மநபர்கள் ஆக்கிரமித்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் ரோடு பகுதியில் மறியல் செய்தனர். போலீசார் சமாதானம் செய்தனர். ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லாவிடம் மனு அளிக்கப்பட்டது.