/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரேஷன், தண்ணீருக்கு அலைச்சல், விடுபட்ட ரோடு பணி ரேஷன், தண்ணீருக்கு அலைச்சல், விடுபட்ட ரோடு பணி
ரேஷன், தண்ணீருக்கு அலைச்சல், விடுபட்ட ரோடு பணி
ரேஷன், தண்ணீருக்கு அலைச்சல், விடுபட்ட ரோடு பணி
ரேஷன், தண்ணீருக்கு அலைச்சல், விடுபட்ட ரோடு பணி
ADDED : ஜூன் 06, 2024 05:29 AM
ராஜபாளையம், : ரேசன், குடிநீருக்கு அலைச்சல், குறுக்கு தெருவில் ரோடு பணிகள் முடக்கம், குடியிருப்பு ஒட்டி புதர் சூழ்ந்து அவதி, கொசு தொல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளால் ராஜபாளையம் நகராட்சி 30 வது வார்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டில் குண்டூர் மூர்த்தி, வரிக்கல் சிங்கராஜா தெரு, குப்புசாமி ராஜா தெரு, பேட்டை ராமசாமி தெரு, சொக்கர் கோவில் தெரு என 10 தெருக்கள் அமைந்துள்ளன.
மெயின் ரோடுகளில் மட்டும் புதிய சாலை பணிகள் முடிந்து சுந்தரி ராஜா தெரு பகுதியில் இதுவரை புதிய ரோடு அமைக்கப்படவில்லை. குடியிருப்பை ஒட்டி கொண்டனேரி கண்மாய் அமைந்துள்ளதால் நகராட்சி துாய்மை பணியாளர்கள் இப்பகுதிகளில் குப்பையை முறையாக வாங்குவதில்லை.
சொக்கர் கோவில் பின் பகுதியில் இருந்து கடைசி வரையிலான கண்மாய் ஒட்டிய குடியிருப்புகளுக்கு மின்விளக்கு வசதியில்லை. நீர்நிலைகள் புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள் வெளியேறுவதால் அச்சத்துடன் உள்ளனர்.
கண்மாய் ஒட்டிய நான்கு தெருக்களில் இருந்து வரும் பிரதான ஓடையில் மண் மேவுவதால் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லைக்கு உள்ளாகின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க மெயின் ரோட்டின் கிழக்கு பகுதிக்கு வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது குடியிருப்பு அருகே ரேஷன் கடை அமைக்க எதிர்பார்க்கின்றனர்.