/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மறியல் கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மறியல்
கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மறியல்
கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மறியல்
கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மறியல்
ADDED : ஜூன் 19, 2024 05:21 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டதை கண்டித்து மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வேலாயுதபுரம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்தது. 2 மாதங்களுக்கு முன்பு பழைய கழிவுநீர் கால்வாய் பாலங்கள் உடைக்கப்பட்டு கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்டது.
ஆனால், கம்பி கட்டும் பணியை மட்டும் செய்துவிட்டு கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 2 தெருக்களை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்நேற்று மாலை மதுரை ரோட்டில் ரோடு மறியல் செய்தனர். போலீசார் சமாதானம் செய்தனர். நகராட்சி அதிகாரிகள் பால பணிகளை விரைவில் முடிக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.