ADDED : ஜூன் 19, 2024 05:20 AM
ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தில் 6 வீடுகள், 2 கடைகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தனிநபர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் வகையில் வருவாய் துறையினர் இடத்தை ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பினர்.
இதனை கண்டித்து சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த பெண்கள் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியதால் இதனை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதாக கலைந்து சென்றனர்.