ADDED : ஜூலை 12, 2024 03:57 AM
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் திறன் வாரம், திறனுாக்கம் பற்றிய தொழில் சார்புநெறி விழிப்புணர்வு நடந்தது.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பிரியதர்ஷினி, முன்னாள் படைவீரர் அலுவலகம் உதவி இயக்குனர் அன்ன புஷ்பம், ராம்கோ சிமெண்ட் இனிகோ ஜெகநாதன், விருதுநகர் சென்டர் சாப்ட் டெக்னாலஜி ஸ்ரீ காஞ்சனா பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை பேராசிரியர்கள் காசி ராஜன், சுதாகர் செய்தனர்.