ADDED : ஜூலை 12, 2024 03:57 AM
உ.பி.,யை சேர்ந்தவர் பலி
விருதுநகர்: உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டம் பிலகுனியாவைச் சேர்ந்தவர் துர்கேஷ் குமார் 37. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜூலை 8 காலை 8:30 மணிக்கு சிகிச்சை பெற்றார். அதன் பின் கிழக்கு நுழைவு வாயில் அருகே இருந்தவர் ஜூலை 9 அதிகாலை 12:30 மணிக்கு இறந்த கிடப்பது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
விருதுநகர்: சூலக்கரை மேடு வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் அரிசி கடை உரிமையாளர் பால்ராஜ் 61. இவர் டூவீலரில் ஜூலை 8 மதியம் 3:30 மணிக்கு கலெக்டர் வளாகம் முன்பு சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். இவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜூலை 10 ல் பலியானார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல்
சாத்துார்: ஆலங்குளம் கீழாண் மறைநாடு காட்டுப் பகுதியில் சிவகாசி துரைப்பாண்டி அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்தார். அங்கு சென்ற போலீசார் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மரச்சல்லடை, அலுமினிய சல்லடை, சல்பர் உப்பு ,வெடி உப்பு ,டிஜிட்டல் தராசு கம்ப்யூட்டர் திரி , பிரசர்கட்டை , பட்டாசுகள், உள்ளிட்ட பொருட்களையும் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: சாத்துார் அய்யம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி, 28. வயிற்துவலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.