ADDED : ஜூலை 07, 2024 01:33 AM

நரிக்குடி: நரிக்குடி பர்மா காலனியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஆபத்தான முறையில் நிற்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே மின் வாரியத்தினர் மின்கம்பம் உயரம் அதிகமாக இருப்பதால் காற்றுக்கு ஒடிந்து விழும் என்பதை அறிந்து, கான்கிரீட் போட்டு வலு சேர்த்தனர். தற்போது அதையும் மீறி விழும் அபாயத்தில் உள்ளது. விழாமல் இருக்க கம்புகள் ஊன்றி முட்டு கொடுத்துள்ளனர். தற்போது அடித்து வரும் பலத்த காற்றால் ஒடிந்து விழுந்து விபத்து ஏற்படும் என்பதால், விபத்திற்கு முன் மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும் என அப்பகுதியினர் விரும்புகின்றனர்.