/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க எதிர்பார்ப்பு காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:32 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் கோர்ட் துவக்கப்பட உள்ளதையடுத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் 150 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்கம், குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவியூர், அ.முக்குளம், மல்லாங்கிணர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டன.
இருந்தபோதிலும் குற்றச் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இதில் மகளிர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெண் போலீசார் விசாரிக்கின்றனர். ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. காரியாபட்டி பகுதிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்று வர வேண்டும்.
அதே போல் மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் கருவக்குடி, பரளச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அருப்புக்கோட்டைக்கு வந்தனர். அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை சப் டிவிஷனை பிரித்து, திருச்சுழி சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது.
அதற்கு பின் மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் துவக்கப்பட்டது. காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இப்பகுதி பெண்கள் அருப்புக்கோட்டைக்கு சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும். அதிக அளவில் புகார் வருவதால் அங்கு பணியாற்றக்கூடிய பெண் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. உரிய காலத்திற்குள் தீர்வு எட்டப்படுவதில் சிரமம் உள்ளது. இதனால் புகார் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணர், அ. முக்குளம் போலீஸ் ஸ்டேசனை உள்ளடக்கி காரியாபட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்டால் இப்பகுதி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சில நாட்களில் கோர்ட் திறக்கப்பட உள்ளதால் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவக்குவதும் அவசியமாவதால் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.