ADDED : ஜூலை 27, 2024 06:22 AM
பணம் பறிக்க முயற்சி
சிவகாசி பள்ளப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ் 42. இவர் நாரணாபுரம் ரோடு போஸ் காலனி பஸ் ஸ்டாப் அருகே வரும்போது முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணா 26, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சிவகாசி வெம்பக்கோட்டை அருகே மம்சாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார் 35. இவர் மாரனேரியில் சலுான் கடை நடத்தி வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் சரியாக சாப்பிடாமலேயே வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடையில் இறந்து கிடந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
-----
முதியவர் பலி
சிவகாசி மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோயில் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பூமாறன் 64. இவர் சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வேலை பார்த்த போது கவனக்குறைவால் கீழே விழுந்து இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
----