முதியவர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் தவசி 62. பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மகன் காதலுக்கு எதிர்ப்பு; தந்தை தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் சின்னமருளூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி 59. சேலத்தில் வெல்டிங் வேலை செய்தார். மகன் ரேகுல் வெல்டிங்வேலை செய்து வருகிறார். மகன், உறவுக்கார பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போதாக தந்தை துரைப்பாண்டியிடம் கூற, அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மறு நாள் மாலை மின்விசிறியில் துாக்கிட்டு தந்தை துரைப்பாண்டி தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
சாரம் அறுந்து விழுந்து பலி
---ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் வினோத் 40, திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளி.நேற்றுமுன்தினம் மாலை ஐ.என்.டி.யூ.சி நகரில் வீட்டின்இரண்டாவது மாடியில் வெளிச்சுவர் பெயிண்டிங்பணியில் ஈடுபட்டிருந்த போது சாரம் அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்டவாளத்தில் முதியவர் உடல்
சாத்துார்: சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். ரயில்வே போலீஸ் விசாரணையில் இறந்தவர் ஒத்தையாலை சேர்ந்த சண்முகவேல், 60. என்பது தெரிய வந்தது. முதியவர் இறப்பு குறித்து துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.