மீன் பிடிக்க சென்றவர் பலி
விருதுநகர்: வெள்ளூரைச் சேர்ந்தவர்காளிராஜ் 38. இவர் ஜூன் 25ல் கண்மாய்க்கு மீன்பிடிக்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. ஜூன் 26 காலையில் கண்மாயில் இறந்து கிடப்பது தெரிந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
விருதுநகர்: மீசலுாரைச் சேர்ந்தவர் ராமு 62. இவருக்கு அவ்வப்போது மனநலம் பாதிப்பு ஏற்பட்டு, பின் பழைய நிலைக்கு திரும்பி விடுவார். இவருக்கு ஜூன் 25 இரவு 10:30 மணிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, ஜூன் 26 அதிகாலை 5:45 மணிக்கு வந்து பார்த்த போது தீயிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
பங்க்கில் படுத்திருந்தவர் மீது ஏறிய கார்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் விஜய், 30, இவர் காந்தி நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் நேற்று முன் தினம் பணியை முடித்துவிட்டு பங்கின் ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது பெட்ரோல் போட வந்த கார், படுத்து இருந்த விஜய் மீது ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள ஊழியர்கள் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காரை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடையின் சூப்பர்வைசர் முத்துக்குமார், 54, நேற்று முன்தினம் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு சேதமடைந்து கிடந்தது. பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்து: 3 பேர் காயம்
சிவகாசி: சிவகாசி சேர்மன் சண்முகம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது 28. இவர் டூ வீலர் ஓட்ட முனீஸ்வரன் 25, பின்னால் அமர்ந்து பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி 54, ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் மூன்று பேரும் காயமடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----பீர்பாட்டிலால் தாக்குதல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் முன் விரோதம்இருந்தது. இந்நிலையில் 17 வயதுசிறுவன் அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே வரும்போது 16 வயது சிறுவன்அவரை தகாத வார்த்தை பேசி பீர் பாட்டிலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
குட்கா பறிமுதல்
சிவகாசி: சிவகாசி கங்கா குளம் ஓம் சக்தி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 35. இவர் தனது ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை கொண்டு வந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், அலைபேசி, ஆட்டோ, ரூ. 1800 பறிமுதல் செய்தனர்.
டூவீலர் மோதி பெண் பலி
காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி செல்வி 38. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு காரியாபட்டி நரிக்குடி ரோட்டை கடக்க முயன்ற போது, நரிக்குடி பனைக்குடியைச் சேர்ந்த செந்தில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.