/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான நகராட்சி நவீன இறைச்சி கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான நகராட்சி நவீன இறைச்சி கூடம்
பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான நகராட்சி நவீன இறைச்சி கூடம்
பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான நகராட்சி நவீன இறைச்சி கூடம்
பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான நகராட்சி நவீன இறைச்சி கூடம்
ADDED : ஜூன் 27, 2024 11:58 PM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி நவீன இறைச்சிக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே கட்டடம் சேதமடைந்து விட்டது.
அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் நகராட்சி மூலம் பல லட்ச ரூபாய் செலவில் 2008ல் நவீன இறைச்சி கூடம் கட்டப்பட்டது. இதில் இறைச்சி கடைக்காரர்கள்ஆடுகளை வெட்டி, பின்னர் விற்க கொண்டு செல்லலாம். திறப்பு விழா கண்டு ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் இறைச்சி கூடம் பூட்டப்பட்டது.
பின், நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையமாகசெயல்பட்ட நிலையில்மீண்டும் கட்டடம்மூடு விழா கண்டது.பல லட்சம் நிதியில் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் ஆங்காங்கு இடிந்தும் சேதமுற்ற நிலையில் உள்ளது. கட்டடத்தை சுற்றி புதர்கள் மண்டியுள்ளது.
இந்த இறைச்சி கூடத்தில் ஆடுகளை வெட்டாமல்இறைச்சி கடைக்காரர்கள்தங்கள் இஷ்டத்திற்கு ஆடுகளை சுகாதார மற்ற முறையில் வெட்டுகின்றனர். இறைச்சி கூடத்தில்ஆடுகளை வெட்ட கடைக்காரர்களுக்கு அறிவுறுத்துவதும் இல்லை. நவீன ஆட்டு இறைச்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.