ADDED : ஜூன் 20, 2024 04:13 AM
பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது
சிவகாசி: சிவகாசி விருதுநகர் அருகே மன்னர் கோட்டையை சேர்ந்தவர் சிவசங்கர் 27. இவர் நாரணாபுரம் பேச்சியம்மன் கோயில் அருகே கடையில் அரசு அனுமதி, உரிமம் இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து ரூ. 56 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
கொலை மிரட்டல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் விருதுநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 30. இவருக்கும் திருத்தங்கல் விஜயன் வீதியைச் சேர்ந்த ராஜேஷுக்கும் 24, ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பால்பாண்டி பஜாரில் நின்ற போது அங்கு வந்த ராஜேஷ், அவரது நண்பர்கள் ஹரிகரன் 19, சாமுவேல் 24, சூர்யா ஆகியோர்அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: ஆலங்குளம் சுண்டங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் இவர் மகன் முத்து கலைமணி, 27 .சிவகாசி அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஜூன் 18 இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் காட்டுப் பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* நரிக்குடி: நரிக்குடி தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் குருநாதன் 30. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. வயிற்று வலியினாலும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து விஷம் குடித்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் மாயம்
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியைச் சேர்ந்தவர் பிரதாபன் இவர் மகன் ஸ்ரீபவன் குமார், 17. ப்ளஸ் 1 படித்து வந்தார். ஜூன் 17 வீட்டிலிருந்தவர் மாயமானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி 60. இரு மகன்கள் உள்ளனர். பாப்பாத்தி விவசாய வேலை செய்து வந்த நிலையில், தனது தோட்டத்தில் உள்ள கைப்பிடி சுவர் இல்லாத கிணற்றில் இரவில் தவறி விழுந்து, பலியானார். தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியை வெட்டிய கணவர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி 25, அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்தகுமாரை 30, காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொலை முயற்சி வழக்கில் கணவர் சிறைச்சென்று 4 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்துள்ளார். மனைவி வேறொரு நபருடன் தொடர்பு உள்ளதாக கணவர் சந்தேகபட்டதால் தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மஞ்சுளாதேவியை கத்தியால் வெட்டியதில் காயமடைந்தார். வடக்கு போலீசார் வசந்தகுமாரை கைது செய்துள்ளனர்.