ADDED : ஜூன் 14, 2024 04:17 AM
டூவீலர் திருட்டு
விருதுநகர்: மல்லாங்கிணர் சேர்ந்தவர் சீலைகருப்பன் 35. இவர் ஜூன் 9 காலை 8:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு டூவீலரில் வந்து பார்க்கிங் நிறுத்தி விட்டு தாய் மாரியம்மாளை பார்க்க சென்றார். இவர் திரும்ப காலை 8:30 மணிக்கு வந்து பார்த்த போது டூவீலர் திருடு போனது தெரிந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
3 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகாசி: சிவகாசி விளாம்பட்டி ரோடு முனீஸ் நகரை சேர்ந்தவர் முருகன் 27. இவர் கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப்பில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். டவுன் போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் சப்பானி முத்தையா 25. மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் வீடு கட்டுவதற்காக லோன் வாங்கி இருந்தார். லோன் கட்டுவதற்காக சப்பானி முத்தையா தனது தாயாரையும் வேலைக்கு போகச் சொன்னார். இதனால் அவரது தாயார் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். . இதனால் மனம் உடைந்த சப்பானி முத்தையா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
சாத்துார்: இருக்கன்குடி கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் வைப்பாறு தென்கரையில் தண்ணீரில் அழுகியநிலையில் 50 வயது மதிக்கத்தக்கஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.