/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு ஆலோசனை கூட்டம் விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்
விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்
விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்
விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 04:18 AM
சிவகாசி: சிவகாசி மத்திய பெட்ரோலியம் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் (பெசோ) விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிப்பது குறித்து பட்டாசு சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மே 9 ல் நடந்த வெடிவிபத்தில் 11 உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து சில பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு விதிமீறும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிவகாசி பெசோ அலுவலகத்தில் விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிப்பது குறித்து பட்டாசு சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை தலைமை அதிகாரி குமார், சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை இணை முதன்மை அதிகாரி சீனி ராஜ் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது, விதி மீறல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டான்பாமா, டிப்மா, உள்ளிட்ட ஐந்து பட்டாசு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.