ADDED : ஜூன் 05, 2024 12:11 AM
லோடுமேன் மர்மசாவு
சாத்துார்: சாத்துார் மேட்ட மலையை சேர்ந்தவர் செல்வகுமார். 27, தினேஷ் மேட்ச் ஒர்க்ஸில் லோடு மேனாக பணிபுரிந்து வந்தார். ஜூன் 4 மாலை 4:00 மணிக்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரெனமயங்கி விழுந்து பலியானார்.
சாத்துார் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மதியம் 3:00 மணிக்கு அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தர்ணா செய்தனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம் பெண் மாயம்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சத்யபிரியா 19. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபருக்கு அடி
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்து முருகன் 18. இவர் ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் சகோதரி மகளுடன் பேசியுள்ளார். இதனால் பிரச்னை இருந்து வந்தது.
முத்து முருகன் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற போது அங்கு வந்த முருகன் அவரை தகாத வார்த்தை பேசி அடித்து கீழே தள்ளினார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்ணனை பீர் பாட்டிலால் அடித்த தம்பி
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் பிச்சை பாண்டி 30. இவருடைய தம்பி முத்துப்பாண்டி 26, இவர்களது பெற்றோர் தனியாக வசித்து வரும் நிலையில் சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். முத்துப்பாண்டி தினமும் மது அருந்திவிட்டு வந்து பிச்சை பாண்டியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மது அருந்தி வந்த முத்துப்பாண்டி பீர் பாட்டிலால் பிச்சைப்பாண்டியின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.