ADDED : ஜூலை 07, 2024 01:35 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் இயற்பியல் சங்கம் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி வேதியியல் துறை பேராசிரியர் மகேந்திர பாபு பேசினார். 84 மாணவிகள் பங்கேற்றனர். மாரீஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.