ADDED : ஜூலை 07, 2024 01:34 AM
சாத்துார்: சர்வதேச நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி வணிகநிர்வாகவியல் துறை மாணவர்கள் சார்பில் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். நெகிழி பையின் தீமைகள் குறித்த பதாகைகள்ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துணிப்பையின் நன்மைகள் குறித்தும் மக்காத குப்பை, மக்கும் குப்பை குறித்து மக்களிடம் விளக்கினர். பேராசிரியர்கள் ரோகினி, பிரியதர்சனா, பிருந்தாதேவி, மற்றும் போலீசார் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.