/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு
ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு
ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு
ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:57 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ராஜபாளையம் நகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைப்பதற்கு படிக்காசு வைத்தான் பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அரசின் முடிவை கைவிடக் கோரியும் கிராம மக்கள் கமிட்டி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி அனுப்பிய மனுவில்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சியில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டம் தான் வாழ்வாதாரமாக உள்ளது.
ராஜபாளையம் நகராட்சியுடன் இணைத்தால் அரசின் இத்தகைய திட்டங்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். அனைத்து வரியினங்களும் உயரும். இதனால் உள்ளாட்சி இணைப்பு முடிவை கைவிடவேண்டும்.
இதனை வலியுறுத்தி ஜூன் 15ல், அனைத்து கிராம மக்கள் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு சார்பில் வன்னியம்பட்டி விலக்கில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.